உக்ரேனுக்குக் கொத்துக் குண்டுகளை வழங்கிய அமெரிக்கா – கூட்டணி நாடுகள் அதிருப்தி

42

அமெரிக்கா உக்ரேனுக்கு சிறு சிறு குண்டுகளை வீசும் எறிபடைகளை வழங்கவிருப்பது குறித்துக் கூட்டணி நாடுகளிடையே அதிருப்தி வலுத்து வருகிறது.

உக்ரேனிடமுள்ள வெடிபொருள்கள் தீர்ந்து கொண்டிருப்பதால் எறிபடைகளை வழங்கும் கடினமான முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.ஆனால் பிரிட்டன், கனடா, நியூசிலந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.கொத்துக் குண்டுகள் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்திய வரலாறு உண்டு.

வீசப்பட்ட பல்லாண்டுக்குப் பிறகு அத்தகைய சிறுசிறு குண்டுகள் வெடிக்கும் அபாயமிக்கவை.உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகள் எறிபடைகள் மூலம் மொத்தமாகச் சிறுசிறு குண்டுகளை வீசத் தடை விதித்துள்ளன.எறிபடைகளைப் பயன்படுத்தும்போது மக்களுக்கான அபாயத்தைக் குறைக்க முயல்வதாக உக்ரேன் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது.

இதற்கிடையே, கிழக்கு எல்லையில் சுமார் 1,000 துருப்பினரின் நிலைகளை மாற்றியமைத்து வருகிறது போலந்து.ரஷ்ய ஆதரவு Wagner படைக்குழு பக்கத்து நாடான பெலரூசில் இருப்பது போலந்தைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

Join Our WhatsApp Group