இலங்கையின் நீதித் துறையின் சுதந்திரத்துக்கும் சவால் விடுக்கும் வீரசேகர..

49

சரத் வீரசேகர எம்.பி குண்டுதுளைக்காத கவசத்தை அணிந்த படி பராக்கிரமம் காட்டுகிறார் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது சிங்கள – பௌத்த நாடு என்பதை நீதிபதிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற சாரப்பட பாராளுமன்றில் சரத் வீரசேகர ஆற்றியஉரை குறித்து சிறீகாந்தா விடுத்த அறிக்கையிலேயேமேற்படி தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், குருந்தூர்மலை ஆலய விவகாரம் என்பது, முல்லைத்தீவு நீதிமன்றத்தின் முன்னால் ஒரு வழக்காக இப்போதும் இருக்கையில், அந்த வழக்கு தொடர்பான விடயங்களை பிரஸ்தாபித்தும் நீதிபதியின் நடவடிக்கைகளை விமர்சித்தும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மிக மோசமான இனவாத கருத்துகளை தனது சிறப்புரிமை என்கின்ற குண்டுதுளைக்காத கவசத்தை அணிந்தபடி பாராளுமன்றத்தில் வெளியிட்டிருப்பது மிக மட்ட ரகமான கோழைத்தனமாகும்.

ஒரு நீதிபதியின் கடமைவழி நடவடிக்கைகளைப் பற்றி பிரஸ்தாபித்து விவாதிப்பதானால், அதற்கென தனியான ஒரு பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.

அதை செய்ய முயற்சிக்காமல், பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து, வக்கிரம் நிறைந்த இனவாத சிந்தனையை சரத்வீரசேகர பாராளுமன்றில் கக்கியிருக்கின்றார்.

நிரூபிக்க முயன்று ஒட்டுமொத்தநீதித் துறையின் சுதந்திரத்துக்கும் சவால் விடுத்திருக்கின்றார்.இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது ஆச்சரியமளிக்கின்றது.

இந்த விடயத்தில், நீதித்துறையின் சுதந்திரத்தையும்சட்டத்தின் ஆட்சியையும் மதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்இ கட்சி மோதல்களையும் இன, மத வேறுபாடுகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, பொறுப்புணர்ச்சியோடு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வரவேண்டும்.

நாட்டின் சகல சட்டத்தரணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை விரைவாக எடுக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம் – என்றுள்ளது.

Join Our WhatsApp Group