இங்கிலாந்து சென்றடைந்தார் ஜோ பைடன்- மன்னர் சார்ல்ஸ், ரிஷி சுனக் ஆகியோரை சந்திக்கிறார்

52

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.
நேட்டோவில் உக்ரைனை இணைப்பது உள்ளிட்ட குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில், நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இங்கிலாந்திற்கு சென்றடைந்தார்.

நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் ஜோ பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.

அப்போது, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பின்போது உக்ரைன் போர் நிலவரம், நேட்டோவில் உக்ரைனை இணைப்பது உள்ளிட்ட குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Join Our WhatsApp Group