அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

22

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிசெய்துள்ளது.

இவ் நிலநடுக்கம் நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நில அதிர்வு மையம் அறிவிப்பின்படி,கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.மேலும் உயிர்சேதம் அல்லது பொருட் சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group