அதிரடியாக வெளியானது ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்பட டிரைலர் (வீடியோ)

58

அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் டிரைலர் சற்று முன் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழில் வெளியான டிரைலரைப் பார்க்கும் போது ஹிந்திப் படம் ஒன்றைப் பார்க்கிறோம் என்றில்லாமல் ஒரு நேரடி தமிழ்ப் படத்தைப் பார்க்கிறோம் என்றே தோன்றுகிறது. அதற்குக் காரணம் படத்தில் உள்ள தமிழ் நடிகர்கள், தமிழ் வசனங்கள்.

முழுக்க முழுக்க ஷாருக்கை மையப்படுத்திய டிரைலராக இருந்தாலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா ஆகியோர் ஒரு சில வினாடிகள் வந்து போகிறார்கள். “நான் புண்ணியமா, இல்ல பாவமா”, “ஹீரோவா, வில்லனா”, “நீங்கதான் நா… ரெடி”, “இது வெறும் ஆரம்பம்தான், இனிமேதான் ஆட்டமே”, “நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா, என் முன்னாடி எந்த ஹீரோவும் நிக்க முடியாது ராஜா,” என ஷாருக்கானின் வசனங்கள் விஜய், அஜித் பட வசனங்களைப் போல ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.

Join Our WhatsApp Group