ஸ்ரீபாத கல்வியற்கல்லூரியை பல்கலை கழக கல்லூரியாக தரமுயர்ததுவது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆசிரியர் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.
மேலும் இது சாத்தியமாகும் பட்சத்தில் வதிவிட,கட்டுறு காலங்களில் மாற்றமேற்படுத்தப்பட்டு 4 வருடங்களாக்கி கல்விமானி பட்டத்துடன் மாணவர்கள் வெளியேற வாய்ப்பேற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாகவும், முறையற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்ட போதே இராஜாங்க அமைச்சர் இது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சந்திப்பில் சமகால ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், ஹட்டன் வலயகல்வி நிலைதொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், இந்த கலந்துரையாடலில் மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் சார்பாக ஜோர்ஜ் வில்ஸன், மலையக ஆசிரியர் முன்னணியின் பொது செயலாளர் ரவிந்திரன்,, ஸ்ரீலங்க சுதந்திர ஆசிரியர் சங்கம் சார்பாக தெய்வேந்திரன் , இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் சார்பாக ரவி,, இலங்கை ஆசிரியர்சங்கம் சார்பாக சுரேஷ்காந்தன், மக்கள் ஆசிரியர் சங்கம் சார்பாக சமந்தன் ஆகிய ஆசிரியசங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்