முச்சக்கரவண்டி விபத்தில் பரிதாபமாக பலியான ஒரு வயது குழந்தை

17

மட்டக்களப்பு- தன்னாமுனை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பாலமுனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி தன்னாமுனை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு வயதும் மூன்று மாதங்களேயான பாத்திமா மைஸ்ஹறா என்ற குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join Our WhatsApp Group