கடந்த ஏழாம் தேதி ஆரம்பமான உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இன்று நிறைவு பெறுகிறது.
சென்னை, செம்மஞ்சேரியில் கடந்த ஏழாம் தேதி ஆரம்பித்து இன்றுடன் வெற்றிகரமாக நடைபெறுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றார்கள். இந்த தமிழராட்சி மாநாட்டின் தொடர் ஆய்வு மாநாடு மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் தேதி ஆரம்பமாகி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
சென்னை ஆசிய கற்கை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் 300 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் எட்டு இலங்கை பேராளாளர்களும் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர், நூலகர் இரா.மகேஸ்வரன்,
தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றினார். மலேசியாவில் நடைபெறும் மூன்று நாள் தமிழராய்ச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் பேராளர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
இலங்கையிலிருந்து கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர் இரா மகேஸ்வரன், திருமதி கேசவன் ஆகியோர் சொற்பொழிவாற்றுவார்கள்.



