கொழும்பு துறைமுக நகரில் one world duty free

20

‘சிங்கப்பூரின் புகழ்பெற்ற ‘வன் வேர்ல்ட் டியூட்டி ஃப்ரீ’ (one world duty free) குழுமம், துறைமுக நகரமான கொழும்பில் ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பிங் மால் (duty free shopping mall) அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

‘வன் வேர்ல்ட் டியூட்டி ஃப்ரீ’ (one world duty free) குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெய்ரா ஷான் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரியத் பண்டு விக்ரம ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ‘வன் வேர்ல்ட் டியூட்டி ஃப்ரீ’ (one world duty free) குழு, கொழும்பு போர்ட் சிட்டியில் 1,250 சதுர மீட்டர் சுங்கவரி இல்லாத வணிக வளாகத்தை வழங்க உள்ளது.

இதன் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக நகர அலுவலகம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group