கிழக்கு நீர் விநியோகத்தை மேம்படுத்த அமைச்சர் ஜீவனுடன் ஆளுநர் கலந்துரையாடல்

39

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

தோட்ட உட்கட்டமைச்சின் காரியாலயத்தில் நேற்று (25) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன், ஆளுநரின் செயலாளர், மாகாண பிற அமைச்சக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள நீர்விநியோக பிரச்சினையை சரிசெய்யவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தண்ணீர் குழாய்களை வழங்கவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருப்பம் தெரிவித்தார்.

மேலும் உள்ளூராட்சி மன்றத்தின் ஊடாக நீர்குழாய்கள் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Join Our WhatsApp Group