கராபிட்டிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்!

11

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி சுகயீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் 19ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் (25) காலை தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இரண்டு மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group