ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகியை சந்தித்தார்.
அந்தச் சந்திப்பில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.