மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு

16

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மீண்டும் எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மேலும், ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, சர்வதேச நாணய நிதிய திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

Join Our WhatsApp Group