நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை ஒட்டி, ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

30

கார்த்தி நடிக்கும் 25-வது திரைப்படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘ஜப்பான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ பட நாயகி அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் புதிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி, ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ள படக்குழு, ஜப்பான் யார் என்பது குறித்து அறிமுக வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

Join Our WhatsApp Group