தனித்துவ அரசியலின் முன்னோடிசிந்தனையாளர் வை.எல்.எஸ் ஹமீட் – அமைச்சர் நஸீர் அஹமட்

9

முஸ்லிம் அரசியலின் முன்னோடிச் சிந்தனையாளர் வை.எல்.எஸ் ஹமீடின் மறைவு, தன்னை திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அமைச்சரின் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தனித்துவ அரசியலுக்கான தேவையை உணர்ந்து செயற்பட்ட முன்னோடிச் சிந்தனையாளர் வை,எல்,எஸ் ஹமீட். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரஃபுடன் நெருங்கிய சகவாசத்திலிருந்த வை.எல்.எஸ், கட்சியின் வளர்ச்சிப் பாதையில், அழியாத தடம்பதித்தவர்.தனித்துவ பாதையிலிருந்து ஆரம்பமான எங்கள் நெருக்கத்தை, அவரது மறைவு இடைவெளியாக்கி விட்டது.

சிறந்த சட்ட விற்பன்னரான வை,எல்,எஸ், ஹமீடின் பங்களிப்புக்களை முஸ்லிம் சமூகம் மறந்துவிட முடியாது. சமூகப் பிரச்சினைகளின்போது, கையாள வேண்டிய ராஜதந்திரங்களை எனக்கு எடுத்துரைப்பார்.

தவறை நேருக்கு நேராகச் சுட்டிக்காட்டும் நேர்மையும் அவரிடமிருந்தது. இறைவனால் வழங்கப்பட்ட தவணை வரையும்தான் ஒரு மனிதன் வாழ முடியும்.இந்த நியதியில்,அன்னாரை அழைத்துக் கொண்ட எல்லாம்வல்ல அல்லாஹ் வை,எல்,எஸ்,ஹமீடைப் பொருந்திக் கொள்வானாக.

Join Our WhatsApp Group