கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களுக்கு திடீர் பாதுகாப்பு

28

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழக பாதுகாப்பும், அவற்றின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவிகளுக்கு தொந்தரவு என்பன அதிகரித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Join Our WhatsApp Group