ஆசியாவின் பெறுமதியை ஜனாதிபதி உலகிற்கு எடுத்துரைத்தார்

20

உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களின் தாயகமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் ஆசியா உலகில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான நிக்கேய் (Nikkei) மன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசியாவில் மூன்று முக்கிய சவால்கள் உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகள், காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு என்பன பிரதான சவால்களாகும் எனத் தெரிவித்திருந்தார்..

ஆசிய நாடுகளில் மனித உரிமைகள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது  வலியுறுத்தியுள்ளார்.

Join Our WhatsApp Group