ஜெர்மனியில் துரிதப்படுத்தப்படவுள்ள விசா நடவடிக்கை!

22

ஜெர்மனியில் இந்தியா, சீனா நாடுகளுக்கான விசா நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தற்பொழுது ஜெர்மனியுடன் வர்த்தக உறகளை மேம்படுத்தி வருகின்றது.

ஆனால் குறிப்பிட்ட இந்த இரு நாடுகளில் இருந்தும் ஜெர்னிக்கான விசா வழங்குவதில் கால தாமதம் தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது.இந்நிலையில் ஜெர்மனி நாடானது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை அதிகரித்து வருகின்றது.இந்தியா மற்றும் சீனா நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருவதற்குரிய விசாவை இந்த 2 நாடுகளில் உள்ள தூதர் நிலையங்கள் விரைவாக வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது ஜெர்மன் நாட்டினுடைய செம்பர் ஒப் கொமஸ் என்று சொல்லப்படுகின்ற வர்த்தக சங்க அமைப்பானது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.இதன்போது ஜெர்மனியின் வெளிநாட்டு அமைச்சரான றனில்லா அபேக் அவர்கள் கடந்த காலங்களில் இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்து இச்சம்பவம் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து இருக்கின்றார்.அதாவது இவ்வகையான விசா நடவடிக்கைகள் துரிதப்படுத்தபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group