அரசியலமைப்புச் சபையில் குறிப்பிடப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் கீழ் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளடக்கப்பட மாட்டாது என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் சட்டம் தனியான சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் இது பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.