சமூக வலைத்தள ஊடக பயன்பாடு தொடர்பான எச்சரிக்கை

24

அதிகமாக சமூக வலைத்தள ஊடகங்களை பயன்படுத்தும் மாணவர்களின் மனநல சுகாதாரம் மோசமாக பாதிக்கும் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

சமூக வலைத்தள ஊடகங்களை வரையறையின்றி பயன்படுத்துவதன் காரணமாக சில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்வது போன்ற மனநிலைமைகளுக்கு உள்ளாகின்றனர் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த நிலைமைக்கு துரிதமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுவர்கள் உட்பட மாணவர்கள் சமூக வலைத்தள ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Join Our WhatsApp Group