ஐ.தே.க கொழும்பு அமைப்பாளராக சாகல ரத்னாயக்க நியமனம்

52

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்கவை நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் மேற்கு தொகுதிக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அங்கு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவில் ஜனாதிபதி பணியாளர் குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மேற்கு கொழும்பு மற்றும் கிழக்கு கொழும்பு ஆகிய இரு தொகுதிகளுக்கான சபைக் கூட்டம் கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றதுடன், புதிய நிர்வாக சபை நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது

Join Our WhatsApp Group