உக்ரைன் கொடி நிறத்தில் ஆடை அணிந்து சிவப்பு திரவத்தை ஊற்றி பரபரப்பினை ஏற்படுத்திய பெண்! (Video)

31

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உக்ரைன் கொடியின் நிறத்தில் ஆடையணிந்து வந்த பெண் ஒருவர் தனது உடைக்குள் மறைத்து வைத்திருந்து சிவப்பு நிற திரவத்தை தன் மீது ஊற்றி பரபரப்பை ஏற்படுத்தியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்றது.

இதில் நேற்று முன்தினம் பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது. இப்படத்தைக் காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் – நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென சிவப்பு நிற திரவத்தை உடலில் ஊற்றிக்கொண்டு கோஷமிட்டார்.

அவரது ஆடை முழுவதும் இரத்தக் கறை படித்ததுபோல் ஆனது. இதனைத் தொடர்ந்து அவரை நிகழ்விடத்தில் இருந்து உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர்கள். இது குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உக்ரைனில் நிலவும் சூழலை உலக நாடுகளுக்கு காண்பிக்கவே அவ்வாறு செய்ததாக அப்பெண் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில், தனது ஆடைகளைக் களைந்து பெண் ஒருவர் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group