இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை அவர் அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரின் பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்கதி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்து இடம் பெற்றது. பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்த பேச்சுவார்த்தையில் முக்கியம்சமாக இருந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் உத்தியோகப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.