பொலிஸ் மாஅதிபரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

12

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவை, உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் தடுப்பில் உள்ளவர்கள், பல்வேறு விசாரணைகளுக்காக, வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு வழிகாட்டல் கோவையை தயாரிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

எனினும், அதனை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில், அடுத்த மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்களான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய குழாம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Join Our WhatsApp Group