அரசியலமைப்பு பேரவையில் சித்தார்த்தனை மறுப்பது தவறான சமிஞ்சை – எச்சரிக்கும் சஜித்

10

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளதாக அவர் இன்று நாடளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும் எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தர்மலிங்கம் சித்தாத்தனை 10வது உறுப்பினராக உறுதிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என அவர் எச்சரித்துள்ளார்.

Join Our WhatsApp Group