ஒரு மீனால் இன்னொரு மீனின் அச்சத்தை உணரமுடியும் – ஆய்வு

13

மீன்களால் மற்ற மீன்களின் அச்சத்தை உணரமுடியும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.ஆய்வின் முடிவுகள் Science சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.மற்ற மீன்களின் பயத்தை உணர்ந்த மீன்களும் அச்சமடையலாம் என்று கூறப்பட்டது.

மனிதர்களிடையே மற்றவர்களுக்கு அனுதாபத்தை உணரச்செய்யும் oxytocin எனும் ரசாயனம் மீன்களிடமும் உள்ளது.ஆய்வில் zebrafish வகை மீன்களிடமிருந்து அந்த ரசாயனம் தொடர்புடைய மரபணு அகற்றப்பட்டது.அதன் பின்னர், மற்ற மீன்கள் அச்சப்பட்டபோதும் அவை அக்கறை காட்டவில்லை.

பின்னர் zebrafish மீன்கள் சிலவற்றில் oxytocin ரசாயனம் செலுத்தப்பட்டபோது அவை மற்ற மீன்களின் உணர்ச்சிகளைக் கவனிக்கத் தொடங்கின.அதற்கு ஏற்றவாறும் செயல்பட்டன.அவ்வகையில் மீன்களும் மனிதர்களைப் போல் செயல்படுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

மனவுளைச்சலால் பாதிக்கப்படும் மீன்களின் மீது zebrafish வகை மீன்கள் அதிகக் கவனம் செலுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்தது.அனுதாபத்தைக் காட்டும் ஆற்றல், சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்குகளிடையே இருந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.அக்காலக்கட்டத்தில் zebrafish வகை மீன்கள் உட்பட பலவகை உயிரினங்களுக்கும் பொதுவான முன்னோடிகள் இருந்தன.

Join Our WhatsApp Group