என்னை கொல்ல சதி நடந்தது.. அப்ரிடியால்தான் உயிருடன் இருக்கிறேன்.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தகவல்

15

சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரவாயில்லை. என் சகோதரன் பிழைக்க வேண்டும் என அப்ரிடி டாக்டரிடம் கூறியிருக்கிறார்.
புதுடெல்லி

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது புகார், பாலியல் துஷ்பிரயோகம் என நீண்டு கொண்டே போகும்.

பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் இம்ரான் நசீர் தான் கிரிக்கெட் திறனில் சிறந்த நிலையில் இருந்த போது தனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கபட்டதாகவும். அதில் இருந்து ஷாகித் அப்ரிடிதான் தன்னை காப்பாற்றினார் என கூறி உள்ளார்.

நாதிர் அலி போட்காஸ்டில் இம்ரான் நசீர் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் யாரோ சேர்த்து இருக்கிறார்கள்.
இது ஒரு மெல்ல கொல்லும் விஷம். அது உங்கள் மூட்டை அடைந்து அவற்றை சேதப்படுத்துகிறது. 8-10 ஆண்டுகளாக, எனது அனைத்து மூட்டுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Join Our WhatsApp Group