10 படகுகள் தீக்கிரை-யாழ்

23

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை .இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group