கத்தார் வெற்றிக்குப் பின்அர்ஜென்ட்டினாவில் களமிறங்கும் முதல் ஆட்டம்!-குதூகலத்தில் மக்கள்

17

கத்தாரில் நடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு, அர்ஜென்ட்டினாவில் லயனல் மெஸ்ஸியும் அவரது குழுவும் களமிறங்கவிருக்கும் முதல் ஆட்டத்திற்குப் பெருத்த வரவேற்பு.உற்சாகத்தின் உச்சியில் இருக்கின்றனர் அர்ஜென்ட்டினா மக்கள்.

போனஸ் அயர்ஸில் உள்ள Monumental விளையாட்டரங்கத்தில் மத்திய அமெரிக்காவின் பனாமா (Panama) குழுவை எதிர்த்து அர்ஜென்ட்டினா விளையாடவிருக்கிறது. 63,000 நுழைவுச் சீட்டுகளுக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

விற்பனைக்கு விடப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அனைத்துச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.விளையாட்டரங்கில் ஒரு நேரத்தில் 344 செய்தியாளர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால் இதுவரை ஊடகச் சான்றளிப்புக்கு 133,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாய் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

கத்தார் உலகக் கிண்ணத்துக்குப் பிறகு ஓய்வு பெறவிருப்பதாக மெஸ்ஸி கூறியிருந்தார். இருப்பினும் உலகக் கிண்ண வெற்றியாளராகச் சில காலம் அர்ஜென்ட்டினா சட்டையை அணிந்து பெருமிதம் கொள்ள விரும்புவதால் அந்த முடிவை ஒத்திவைத்திருப்பதாக அவர் சொன்னார்.

Join Our WhatsApp Group