2023 இறுதிக்குள் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி ரூ. 390 ஆக வாய்ப்பு!

33
  • நேற்று உலகின் வேகமாக வளர்ச்சியுற்ற நாணயமாக இலங்கை ரூபா பதிவு, ஆயினும் 1/5 ஆக வீழ்ச்சியடையுமென Fitch நிறுவனம் தெரிவிப்பு

இவ்வருட இறுதிக்குள் இலங்கை ரூபாவானது டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கை இழந்து ரூ. 390 ஆக வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுவதாக, ஃபிட்ச் நிறுவனம் (Fitch Solutions) எதிர்வுகூறியுள்ளது.

Fitch Solutions ஆனது, நிதியியல் ரீதியான தரவு, ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய சந்தைகள் மற்றும் பொருளாதார சூழல் பகுப்பாய்வுகளுடன் கடன் ஆபத்து மற்றும் மூலோபாய தரவுகளை வழங்கும் நிறுவனமாகும்.

இந்நிறுவனமே குறித்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில், கடந்த இரண்டு வாரங்களில் மிக வேகமாக பெறுமதி உயர்வடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி, இவ்வருட (2023) இறுதியில் மீண்டும் சரியக்கூடுமெனவும் அதன் பெறுமதியில் ஐந்தில் ஒரு பகுதியால் அது பெறுமதி இழக்க வாய்ப்புள்ளது எனவும் Fitch Solutions தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி கடந்த (08) 3 சதவீதம் அதிகரித்து 313.7749 ஆக பதிவாகியிருந்தது.

கொள்வனவு பெறுமதி கடந்த (08) 3 சதவீதம் அதிகரித்து 313.7749 ஆக பதிவாகியிருந்தது. இது அதன் வருடாந்த உயர்வின் 15 சதவீதமாகும். அந்த வகையில் இவ்வருடத்தில் இதுவரை உலகின் மிகச் சிறப்பாக செயல்படும் நாணயமாக இலங்கை ரூபா பதிவாகியுள்ளது.

இதேவேளை, Fitch Solutions அதன் தரவுகள் மூலமான எதிர்வுகூறலின் அடிப்படையில், இவ்வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி டொலருக்கு நிகராக ரூ. 390 ஆகக் குறையுமென குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை இவ்வருடத்தின் 2ஆம் காலாண்டுக்குள் IMF இன் நிதி வசதியளிப்பு பொதியைப் பெறுமென Fitch நம்பிக்கை வெளியிட்டுள்ளதோடு,n எதிர்காலத்தில் தடங்கல்கள் எழும் சாத்தியமும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை இவ்வருடத்தின் 2ஆம் காலாண்டுக்குள் IMF இன் நிதி வசதியளிப்பு பொதியைப் பெறுமென Fitch நம்பிக்கை வெளியிட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் தடங்கல்கள் எழும் சாத்தியமும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

Join Our WhatsApp Group