ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “மேன்”

0
11

இகோர் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படத்துக்கு ‘மேன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு’ என்று கேப்ஷனும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ் மற்றும் அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சரண்யா பாக்யராஜ் திரைக்கதை எழுதியுள்ள இதில் ஆரி அர்ஜுனன் வில்லனாக நடிக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பொன் பார்த்திபன் வசனம் எழுதுகிறார்.

“ஆண்மை என்பது அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் இது கட்டமைத்துள்ளது. இதற்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப்போரை உள்ளடக்கியது தான் ‘மேன்’. இதில் ஹன்சிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்றார் இகோர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்