போலீசார் எப்படி செயல்பட்டார்கள்…?
அமைச்சர் டிரான் அலசுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

15

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அமைச்சருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான போராட்டங்களை கட்டுப்படுத்த களப்பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

Join Our WhatsApp Group