பொலிஸாரின் கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்

11

கொழும்பில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை தாக்குதலினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்காகப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை எதிர்த்து கொழும்பு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது.கொழும்பு, கேம்பிரிட்ஜ் பகுதியில் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து, அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போதே பல பாடசாலை மாணவர்கள் பொலிஸாரின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிப் பாதிக்கப்பட்டனர்.இதனால் இருமல் மற்றும் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Join Our WhatsApp Group