பெண் மீது அசிட் வீசிய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

9

பண்டாரவளை, எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் பெண் ஒருவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் பண்டாரவளை பகுதியை சேர்ந்த இராணுவ பொறியியலாளர் பிரிவில் கடமை புரிந்து தற்போது இராணுவத்திற்கு செல்லாது தலைமறைவாகி இருந்த 23 வயதுடைய இளைஞனே காதலியின் தாய் மீது இந்த அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அசிட் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் தாய் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு குறித்த பெண்ணுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 23 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group