பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை!

16

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள தந்தையொருவர் முயற்சியத்த சம்பவமொன்று கம்பளை – நெத்தபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு வயது மகள், 7 மற்றும் 14 வயது மகன்களுக்கே தந்தை விஷம் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group