“பாதுகாப்பற்ற முறையில் வாழும் 3 இலட்சம் சிறார்கள்”-இலங்கை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்

9

இலங்கையில் பல்வேறு காரணங்களால் சுமார் 3,43,000 இற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்வதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள மொத்த சிறார்களின் 10 வீதமானோர் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் வசிப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார மற்றும் பல்வேறு சமூக காரணங்களால் சிறுவர்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சிறுவர்கள் அநாதை இல்லங்களுக்கு செல்வதைத் தடுப்பதற்கும் வேறு மாற்று முறைகள் மூலம் அவர்களை பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மாற்று பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group