நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் சாதனை

33

இலங்கை அணிக்காக 7,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.

கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 47 ஓட்டங்களை பெற்றதை அடுத்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 13 சதங்கள், 38 அரைசதங்கள் உட்பட 7000 ஓட்டங்களை கடந்துள்ளார். 

எனினும், இன்றைய போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியின் பந்து வீச்சில் 47 ஓட்டங்களுக்கு அவர் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Join Our WhatsApp Group