வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை திரைப்படம் தற்போது ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் சில இழுபறிகளின் காரணமாக இப்போது வெளியாக இருக்கிறது. மேலும் பீரியட் க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படம் சிறு பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட இருந்தது.
ஆனால் போகப் போக கதையில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்ததால் கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி தற்போது விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அதன் படி முதல் பாகம் இந்த மாத இறுதியில் வெளிவரும் நிலையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு போஸ்டர் உடன் வெளியாகி இருந்தது. நீண்ட நாட்களாக இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இதை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இதற்கு முக்கிய காரணம் தன் நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த சூரி இதில் கதாநாயகனாக நடித்திருப்பது தான். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த விடுதலை திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. மிரள வைக்கும் பின்னணி இசை, விசுவல் காட்சிகள் என்று ட்ரெய்லர் பார்ப்பதற்கே படு மிரட்சியாக இருக்கிறது.
அந்த வகையில் விரைவு ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகி விட்டது என்ற செய்தியோடு ட்ரெய்லர் ஆரம்பமாகிறது. அதைத் தொடர்ந்து தன் இனத்தை காப்பாற்ற போராடும் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி, கதையின் நாயகனாக அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கும் சூரி இருவரும் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றனர். மேலும் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியும் பயங்கர சஸ்பென்ஸ் கலந்த டுவிஸ்ட்டாக இருக்கிறது. இதுவே படத்தின் ரிலீஸ் நாளையும் எதிர்நோக்கி காக்க வைத்துள்ளது.