சீனாவுக்குப் பகுதி மின்கடத்தித் தொழில்நுட்ப ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவிருக்கும் நெதர்லந்து

9

சீனாவுக்கான பகுதி மின்கடத்தித் தொழில்நுட்ப ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தப் போவதாக நெதர்லந்து அறிவித்துள்ளது.

தேசியப் பாதுகாப்பை முன்னிட்டு கணினிச் சில்லுகளின் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிடுவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜப்பானும் நெதர்லந்தும் கணினிச் சில்லுத் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன.

ஏற்கெனவே அமெரிக்கா அத்தகைய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைச் சீனா மீது விதித்துள்ளது. ஆனால் அவை எதிர்பார்த்த பலனைத் தரவேண்டுமானால் ஜப்பானும் நெதர்லந்தும் அதுபோன்ற கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.

இப்போது நெதர்லந்து அதனை அறிவித்துள்ளது. மூன்று நாடுகளுமே இதுகுறித்துக் கடந்த சில மாதங்களாகப் பேச்சு நடத்திவந்தன.புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடு கோடைக்காலத்துக்கு முன் அறிமுகமாகுமென நெதர்லந்து வர்த்தக அமைச்சர் அறிவித்தார்.

Join Our WhatsApp Group