சர்ப்ரைஸ் கொடுத்த STR48 அப்டேட்

35

நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இயக்குனரான கிருஷ்ணாவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்த படம் ‘மப்டி’ என்னும் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிலம்பரசன் மணல் கடத்தும் தாதாவாக வருகிறார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா பவானிசங்கர் நடிக்கின்றனர். பத்து தல படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சிம்புவின் 48 ஆவது படத்தின் அப்டேட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏற்கனவே அவர் தன்னுடைய 48 ஆவது படம் கொரோனா குமார் என்று அறிவித்திருந்த நிலையில், அந்த படம் தற்போது ‘லவ் டுடே’ பட இயக்குனர் மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதனிடம் கை மாறியிருக்கிறது. இதனால் சிம்புவின் அடுத்த படத்தை பற்றி பல வியூகங்கள் எழுந்து வந்தன.

இதற்கிடையில் சிம்பு, அவருடைய முந்தைய ஹிட் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தயாரிப்பாளர், ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸுடன் இணையவிருக்கிறார் என்று கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது சிம்புவின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பது உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.

‘பிளட் அண்ட் பேட்டல்’ என்று தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட இருப்பதாக நேற்று டிவிட்டரில் ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பகிர்ந்திருந்தது. இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கிறார், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Join Our WhatsApp Group