கரியமிலவாயுவைத் திரட்டி, கடலுக்கடியில் புதைத்து வைக்கும் டென்மார்க்

11

டென்மார்க் கரியமிலவாயுவை நார்த் சீ (North Sea) கடலுக்கடியில் புதைக்கும் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.கரியமிலவாயு கடலுக்கடியில் சுமார் 1,800 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்படும்.திட்டத்தின்கீழ் “கரியமிலவாயு இடுகாடு” என்றழைக்கப்படும் அந்த இடத்திற்குள் கரியமிலவாயு செலுத்தப்படும்.

வெப்பவாயுவான கரியமிலவாயுவினால் உலகவெப்பம் கடுமையாவதைத் தவிர்க்கத் திட்டம் வழிவகுக்கும்.திட்டத்தின் பெயர் “Greensand”. அதற்கான உரிமம் சென்ற ஆண்டு டிசம்பரில் அளிக்கப்பட்டது.Wintershall Dea என்ற ஜெர்மானிய எண்ணெய் நிறுவனமும் பிரிட்டிஷ் ரசாயன நிறுவனமான Ineosஉம் இணைந்து அந்தத் திட்டத்தை நடத்துகின்றன.

ஐரோப்பாவில் இயங்கும், நடப்புக்கு வரவிருக்கும் மற்ற கரியமிலவாயு இடுகாட்டுத் திட்டங்களில், அருகிலிருக்கும் இடங்களிலிருந்து கரியமிலவாயு பெறப்பட்டுக் கடலுக்கடியில் புதைக்கப்படுகிறது.ஆனால் Greensand திட்டத்தின் கீழ் தூரத்திலுள்ள இடங்களிலிருந்து கரியமில வாயு இறக்குமதி செய்யப்படுகிறது. அது பெல்ஜியத்தில் திரவமாக்கப்பட்டு, பின்னர் கடலுக்கடியில் புதைக்கப்படுகிறது.

Join Our WhatsApp Group