எதிர்வரும் 15 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்

25

எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களும் இன்று (09) முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

Join Our WhatsApp Group