(09.03.2023) இன்றைய ராசி பலன்கள்

39

மேஷம்

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிரடியாக செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
  • அஸ்வினி : வரவுகள் உண்டாகும்.
  • பரணி : ஆதாயம் ஏற்படும்.
  • கிருத்திகை : ஆதரவான நாள்.

ரிஷபம்

உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
  • கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
  • ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.
  • மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிதுனம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்பு உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
  • மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
  • திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
  • புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

கடகம்

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் அலங்கரிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்வான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
  • புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
  • பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • ஆயில்யம் : இழுபறிகள் விலகும்.

சிம்மம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு பணிகளில் இருந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். நண்பர்களுடன் இணைந்து பயணங்கள் சென்று வருவீர்கள். இழுபறிகள் குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
  • மகம் : நெருக்கடிகள் குறையும்.
  • பூரம் : கவனம் வேண்டும்.
  • உத்திரம் : இழுபறிகள் குறையும்.

கன்னி

எண்ணியதை நிறைவேற்றி கொள்வதில் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். குழந்தைகளின் கல்வியில் கவனம் வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
  • உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
  • அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம்

தொழில் நிமிர்த்தமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். மறைமுக போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக எண்ணிய பயணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
  • சித்திரை : போட்டிகள் குறையும்.
  • சுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.
  • விசாகம் : பயணங்கள் கைகூடும்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். வேலையில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் தாராளமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு திருப்தியை ஏற்படுத்தும். சமூக பணிகளில் உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தாமதம் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
  • விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
  • அனுஷம் : அனுகூலமான நாள்.
  • கேட்டை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

தனுசு

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாக்கு சாதுரியத்தால் அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் லாபம் ஏற்படும். நிர்வாக பணிகளில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
  • மூலம் : அனுகூலமான நாள்.
  • பூராடம் : விவேகம் வேண்டும்.
  • உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

மகரம்

வெளியூர் செல்வது தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொது காரியங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். புகழ் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
  • உத்திராடம் : எண்ணங்கள் பிறக்கும்.
  • திருவோணம் : நன்மை உண்டாகும்.
  • அவிட்டம் : தடைகள் விலகும்.

கும்பம்

நகைச்சுவையான பேச்சுக்களை தவிர்க்கவும். உடைமைகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எண்ணிய உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பழைய நினைவுகளால் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
  • அவிட்டம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.
  • சதயம் : குழப்பமான நாள்.
  • பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

மீனம்

சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
  • பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
  • உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
  • ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.
Join Our WhatsApp Group