பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரருக்கு பிடியாணை

10

மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது

Join Our WhatsApp Group