சீனாவினால் பாடசாலை சீருடைகள் 70% நாட்டை வந்தடைந்தன

9

2023 ஆம் கல்வியாண்டுக்கான சீன அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சீருடைகள் முழுமையாக கிடைக்கபெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் நாட்டின் பாடசாலை சீருடை தேவையில் 70% பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளது.

இறுதி சீருடைப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதுவர் அவர்களினால் கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன்படி, ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சீருடை விநியோகத்தை விரைவுபடுத்தி அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் சீருடை விநியோகத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் பாடசாலைகள் அனைத்துக்கும் வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group