இந்திய மீனவர்கள் கடல் தாண்டி வருவதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது – சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பி

10

வடக்கில் உள்ள எங்களது மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பிரதேசத்துக்குள் ஊடுருவேன் மேம்படுத்தவை எந்த வகையில் நாம் ஆதரிக்கப் போவதில்லை” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கூடிய போது, உரையாற்றியவர் இதனை தெரிவித்தார்.
வடபகுதி கடலில் இந்திய மீனவர்களும் வடக்கு மீனவர்களும் மோதிக் கொள்வதை நாம் விரும்பவில்லை. தொப்புள் கொடி உறவுகள் அப்படி மோதிக் கொள்ளவும் கூடாது.அது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகவும் இருக்கக் கூடாது.
ஆகவே உரிய பேச்சு வார்த்தைகள் நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.
இருநாட்டு மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக, நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதியிடம் நேரடியாக கவனத்தில் கொண்டு வந்துள்ளேன். ஜனாதிபதி ரணில்,இதில் தலையிட்டு, பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
லைசன்ஸ் முறை மூலம் இந்திய மீனவர்களை வடபகுதிக்குள் அனுமதிக்கும் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிகிறோம். இந்த லைசென்ஸ் முறையை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். இதனை வடபகுதி மீனவர்களோடு நானும் எதிர்ப்பேன் எனவும் சார்ள்ஸ் நிர்மலநா தன் கூறினார்.

Join Our WhatsApp Group