கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கும் கொழும்பு றோயல் கல்லூரிக்கும் இடையிலான 144 ஆவது ‘ப்ளூஸ் போர் ‘ ( battle of the blues ) உள்ளூராட்சி தேர்தலைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
பொதுவாக மார்ச் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் நீண்ட கால பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, தேர்தலுக்கு அடுத்த வாரம் மாற்றப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் போட்டியின் தொடக்க நாளில் திட்டமிடப்பட்டிருப்பதாலும், சாத்தியமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும் போட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூட்டு ஏற்பாட்டுக் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட குழு, இப்போட்டியானது எதிர்வரும் மார்ச் மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் SSC மைதானத்தில் பார்வையாளர்களுடன் விளையாடப்படும் என தெரிவித்துள்ளது.

“திட்டமிட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இரண்டு பாடசாலைகளின் கூட்டு போட்டி ஏற்பாட்டுக் குழு அடுத்த வாரத்திற்கு விளையாட்டை மாற்ற முடிவு செய்துள்ளது, ”என்று குழு மேலும் கூறியது.
144வது ப்ளூஸ் போர் ( battle of the blues ) இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்வையாளர்கள் நிறைந்த சந்திப்பிற்குத் திரும்புகிறது. கல்கிசை புனித தோமஸ் கல்லூரியானது 2018 இல் கேடயத்தை மீட்டெடுத்து கைவசம் வைத்துள்ளது.