ஜோன்ஸ்டனின் ஆட்சேபனை மனு மேல் நீதிமன்றால் நிராகரிப்பு: மே. 10 இல் விசாரணை

13

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தடையில்லை என தெரிவித்த நீதிபதி, மே 10ஆம் திகதி விசாரணை நடைபெறும் என்றும், சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது கடமைகளிலிருந்து விலக்கி அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Join Our WhatsApp Group