இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

0
29

காசா: பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியாகினர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கு வன்முறை வெடித்தது. இதில் இஸ்ரேல் நடத்திய தாக்குதில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதனை பயங்காரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜெனின் முகாமில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காசா பகுதியிலும் இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைய, சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் உருவாகியது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு இத்தகைய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்