சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து இரண்டு தினங்களுக்கு முன்பு ஜனவரி 25ல் வெளியான ஹிந்திப் படம் ‘பதான்’. இந்தப் படம் முதல் நாள் வசூலாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டும் சுமார் 69 கோடி வசூல், வெளிநாடுகளில் 37 கோடி வசூல் என முதல் நாள் வசூலாக 106 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். ஹிந்தியில் ஒரு படம் வெளியான முதல் நாளில் 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. 2023ல் முதல் நாளில் 100 கோடி வசூலைக் கடந்த முதல் படம் இது. இந்த சாதனையை இதற்கு முன்பு ஐந்து படங்கள் கடந்துள்ளன.